தேசிய செய்திகள்

கொல்கத்தா வன்முறையை அடுத்து டுவிட்டரில் புகைப்படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள் + "||" + Day after Kolkata violence, Mamata and TMC leaders change profile photos

கொல்கத்தா வன்முறையை அடுத்து டுவிட்டரில் புகைப்படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்

கொல்கத்தா வன்முறையை அடுத்து டுவிட்டரில் புகைப்படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்
கொல்கத்தா வன்முறையை அடுத்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றியுள்ளனர்.
கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது.   அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.  சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. 

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை மாற்றியுள்ளனர். சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகர் புகைப்படத்தை தங்களுடைய அடையாள புகைப்படமாக திரிணாமுல் காங்கிரசார் வைத்துள்ளனர். பா.ஜனதாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ், தெரிக் ஒ பிரையன் ஆகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே பா.ஜனதாவை கண்டித்து போராட்டம் மேற்கொள்ளவும் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் - மாணிக்ராவ் தாக்கரே சொல்கிறார்
பா.ஜனதா, சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர் என மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார்.
2. பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் - பிரதமர் மோடி பேச்சு
பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
3. பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
4. துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி: பா.ஜனதா மூத்த தலைவர்கள் போர்க்கொடி - எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது
எடியூரப்பாவின் மந்திரிசபை விரிவாக்கத்தை தொடர்ந்து மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதோடு 3 துணை முதல்-மந்திரி பதவிகளும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.க்களாக உள்ள பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதோடு அவர்களது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதனால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
5. பா.ஜனதா- சிவசேனா கட்சியினர் அறிவிப்புகளை வெளியிடுவதில் கில்லாடிகள் காங்கிரஸ் தலைவர் கிண்டல்
ஆளும் பா.ஜனதா- சிவசேனா கட்சியினர் அறிவிப்புகளை வெளியிடுவதில் கில்லாடிகள் என காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் கிண்டலாக கூறினார்.