தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் + "||" + No election campaigning to be held in 9 constituencies of West Bengal

மேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம்

மேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம்
மேற்கு வங்காளத்தில் வன்முறையை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது.  அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.  சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றம் சாட்டுகிறது. 

தேர்தல் தொடங்கியதில் இருந்து பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நேரிட்டு வருகிறது. நேற்றைய வன்முறையை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 
 
மேற்கு வங்காளத்தில் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலில் 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கு பிரசாரம் 17-ம் தேதியுடன் முடியும். இப்போது வன்முறை காரணமாக நாளை 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வித்யாசாகரின் சிலை சேதம் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. மாநில நிர்வாகத்தால் குண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சந்திரயான்-2 பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி -மம்தா பானர்ஜி
சந்திரயான்-2 பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
2. சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது
சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. துர்கா பூஜைக்கு வரிவிதிக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு வருமான வரித்துறை வரிவிதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தபோவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
4. மேற்கு வங்காளம்- பீகார் ஆளுநர்கள் மாற்றம்
மேற்கு வங்காளம்- பீகார் மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
5. தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.