தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் பெண் நக்சலைட் பச்சிளம் குழந்தையுடன் சரண் + "||" + Woman Naxal carrying her baby in arms surrenders in C'garh

சத்தீஷ்காரில் பெண் நக்சலைட் பச்சிளம் குழந்தையுடன் சரண்

சத்தீஷ்காரில் பெண் நக்சலைட் பச்சிளம் குழந்தையுடன் சரண்
தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் பச்சிளம் குழந்தையுடன் சரண் அடைந்தார்.
ராய்ப்பூர், 

சத்தீஷ்கார் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் சுனிதா (வயது 30) என்ற பெண் நக்சலைட், தான் கடந்த வாரம் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையுடன் போலீசில் சரண் அடைந்தார். அவரது தலைக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர் பல்வேறு துப்பாக்கி சண்டைகளில் சம்பந்தப்பட்டவர்.

சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த அப்பெண், 2014–ம் ஆண்டு நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்தார். கடந்த ஆண்டு, முன்னா மண்டாவி என்ற நக்சலைட்டை திருமணம் செய்து கொண்டார். பிரசவத்துக்காக, கடந்த வாரம் சுனிதாவை கங்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் விட்டுச்சென்றனர்.