தேசிய செய்திகள்

வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோ; திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது + "||" + Vidyasagar's statue breaks down by BJP; Trinamul Congress issued video

வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோ; திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது

வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோ; திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது
வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறை வெடித்ததில் தத்துவ மேதையும், வங்காள மறுமலர்ச்சிக்கு காரணமானவருமான இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்தது.

திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி நேற்று இந்த சிலை உடைப்பு காட்சி அடங்கிய வீடியோவை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார். அதில், காவி நிற டி-சர்ட் அணிந்த பா.ஜனதா தொண்டர்கள் அந்த சிலையை சுக்குநூறாக உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. சட்டர்ஜி கூறும்போது, இதுதான் பா.ஜனதாவின் கலாசாரம். அமித்ஷாவும், அவரது கட்சியினரும் சிலை உடைப்பு வி‌ஷயத்தில் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
சிறுமியின் நெற்றியில் பைத்தான் வகை பாம்பு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
2. மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பொது மக்கள்- வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிராவில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கொண்டு செல்லும் போது ஆம்புலன்சிற்கு பொதுமக்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
3. யார் லஞ்சம் வாங்குவது என்பதில் போலீசார் இடையே சண்டை; வைரலான வீடியோ
யார் லஞ்சம் வாங்குவது என்பதில் 2 போலீசார் சண்டை போட்டு கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
4. ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ
ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
5. சாலையோரம் பதுங்கி இருந்து வருவோரை முட்டி மோதிய காளை; வைரலாகும் வீடியோ
குஜராத்தில் சாலையோரம் பதுங்கி இருந்து அங்கு வருவோரை காளை ஒன்று முட்டி மோதிய வீடியோ வைரலாகிறது.