மாநில செய்திகள்

ஆற்றோரம் வீசப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் + "||" + The river was thrown out More than 3000 Aadhar cards

ஆற்றோரம் வீசப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள்

ஆற்றோரம் வீசப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றோரம் வீசப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேவர்பண்ணையில் உள்ள முல்லியாற்றின் ஓரத்தில் இன்று காலை இரு மூட்டைகள் இருந்துள்ளன. இதனை கண்ட சிலர் மூட்டைகளை கீழே கொட்டி பார்த்த போது அதில் இருந்து ஏராளமான ஆதார் அட்டைகள் விழுந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை கைப்பற்றினர். ஆதார் அட்டைகளில் சுற்றுவட்டாரப் பகுதியினரின் முகவரிகள் உள்ளன. அவை போலி ஆதார் அட்டைகளா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.