மாநில செய்திகள்

ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் பலி வழக்கில் திடீர் திருப்பம் + "||" + AC Minsk In the fire 3 people are trapped in the case Sudden twist

ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் பலி வழக்கில் திடீர் திருப்பம்

ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் பலி வழக்கில் திடீர் திருப்பம்
திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கெளதம் ஆகியோர் வீட்டின் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த அறையில் தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டார். முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் முதியவர் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

எரிந்த நிலையில் அறையை விட்டு ராஜ் ஓடி வந்திருப்பதாக கூறப்படுவதால், அவரைத் தப்பிக்க விடக் கூடாது என்று எண்ணி யாராவது தாக்கி இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் போலீசாரின் சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு ஏசி மின்கசிவு எனக் கூறி சமாளிக்க திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த ராஜூக்கு, அதிகம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே சொத்துப் பிரச்சனையில் ராஜூ, அவரது மனைவி மற்றும் இளைய மகன் என மூவரும் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ எரிந்து கொண்டிருந்த போது ராஜின் மூத்த மகனான கோவர்த்தனன் அருகில் உள்ள மற்றொரு அறையில் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இதுதொடர்பாக கோவர்த்தனனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு இருப்பது உண்மையா? என்பது குறித்து ஏசி பழுது நீக்கும் நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே ராஜ், கலைச்செல்வி, கெளதம் ஆகியோரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் ஜெய்சங்கர் என்பவர் கூறியுள்ளார். ராஜின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஏ.சி.யில் ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து: 3 பேர் பலி!
ஏசியில் ஏற்பட்ட கேஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...