மாநில செய்திகள்

ஒரே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு, பி.எட் தேர்வு: மாணவ, மாணவியர் அதிர்ச்சி + "||" + In one day TRB exam and B.Ed exam Students shocked

ஒரே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு, பி.எட் தேர்வு: மாணவ, மாணவியர் அதிர்ச்சி

ஒரே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு, பி.எட் தேர்வு: மாணவ, மாணவியர் அதிர்ச்சி
ஆசிரியர் தகுதித்தேர்வும் பி.எட் இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை,

பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு விதிமுறை வகுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வெளியிட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 15-ந் தேதி முதல் ஏப்ரல் 12-ந் தேதி வரை இணையதளம் வாயிலாக பெறப்பட்டன. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் எழுதுவதற்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் எழுதுவதற்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் என 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

ஆனால் தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஜூன் மாதம் 8-ந் தேதியும், ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் 9-ந் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வும், பி.எட் இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த இரண்டு தேர்வுகளும் மிக முக்கியம் என்பதால் எதை எழுதுவது என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அடுத்த மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.