தேசிய செய்திகள்

பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் - மம்தா பானர்ஜி + "||" + Dont need BJPs money Bengal has enough to rebuild Vidyasagar statue Mamata

பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் - மம்தா பானர்ஜி

பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் - மம்தா பானர்ஜி
வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.  சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. 

இந்நிலையில் கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என பிரதமர் மோடி கூறினார். 

இதற்கு மம்தா பானர்ஜியிடம் இருந்து பதில் வெளியாகியுள்ளது, வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம், எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் எனக் கூறியுள்ளார்.  

மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில், “கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு ஏன் பா.ஜனதாவின் பணம்? மேற்கு வங்காளத்திடமே போதுமான வளம் உள்ளது. சிலைகளை சிதைப்பது பா.ஜனதாவின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவில் அதைதான் செய்தார்கள். பா.ஜனதா மேற்குவங்காளத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற ஒருகட்சியை ஆதரிப்பவர்களையும் இந்த சமூகம் ஏற்காது. சமூக வலைதளங்களில் போலியான செய்தியை பரவச்செய்து பா.ஜனதா வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது,” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில்தான் அவசர நிலை காணப்படுகிறது : மம்தாவிற்கு பா.ஜனதா பதிலடி
மேற்கு வங்காளத்தில்தான் அவசர நிலை காணப்படுகிறது என மம்தாவிற்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
2. ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதி - மாயாவதி குற்றச்சாட்டு
ஒரே தேசம், ஒரே தேர்தலுக்கு பின்னால் பா.ஜனதாவின் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
3. கால்நடை முகாமுக்கு வழங்கப்படும் மானியத்தில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் ஊழல் அசோக் சவான் குற்றச்சாட்டு
கால்நடை முகாமுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் ஊழல் செய்வதாக அசோக் சவான் குற்றம் சாட்டினார்.
4. தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
5. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா, சந்திரசேகர் ராவ் முடிவு
நிதி ஆயோக் கூட்டத்தை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.