மாநில செய்திகள்

ரஜினிகாந்துடன் பொன்ராஜ் சந்திப்பு தமிழக அரசியல் குறித்து விவாதம்? + "||" + Rajinikanth meet with ponraj

ரஜினிகாந்துடன் பொன்ராஜ் சந்திப்பு தமிழக அரசியல் குறித்து விவாதம்?

ரஜினிகாந்துடன் பொன்ராஜ் சந்திப்பு தமிழக அரசியல் குறித்து விவாதம்?
நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில், பொன்ராஜ் சந்தித்து தற்போதைய தமிழக அரசியல் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி தலைவர் பொன்ராஜ் சந்தித்து தற்போதைய தமிழக அரசியல் குறித்து பேசி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நிலையில் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றுள்ளது. நண்பர் என்ற அடிப்படையில் ஆலோசனை நடத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராஜ் தெரிவித்தார்.  

இந்த சந்திப்பில் தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை, தமிழக குடிநீர் பிரச்சினை, நதிநீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.