மாநில செய்திகள்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு + "||" + Heavy rainfall in the next 24 hours

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும், இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. திருத்தணி - 107, வேலூர், திருச்சி, மதுரையில் 106, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தியில் - 104, சேலம், மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பம் பதிவானது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.