மாநில செய்திகள்

4 தொகுதிகளில் இடைத்தேர்தல்: வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் வெளியேற வேண்டும் - சத்யபிரதா சாகு + "||" + ByElections Party workers must leave SatyabrataSahoo

4 தொகுதிகளில் இடைத்தேர்தல்: வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் வெளியேற வேண்டும் - சத்யபிரதா சாகு

4 தொகுதிகளில் இடைத்தேர்தல்: வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் வெளியேற வேண்டும் - சத்யபிரதா சாகு
4 தொகுதிகளில் இடைத்தேர்தலை முன்னிட்டு வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் கடந்த 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்த போது, காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மீதம் உள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு, நாடாளுமன்றத்துக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடை பெறும் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெற்றது.

4 தொகுதிகளிலும் அ.தி. மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். பரிசீலனையின் போது முறையாக இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர், தங்கள் மனுக்களை வாபஸ் பெற நேற்று பிற்பகல் 3 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அப்போது 4 தொகுதிகளிலும் மொத்தம் 15 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 4 தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் இருந்து நாளை மாலை 6 மணிக்கு மேல், வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சி பணியாளர்கள் வெளியேற வேண்டும்.

நாளை மாலை 6 மணி முதல் கருத்துக்கணிப்பு, பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்த தேர்தல் விவகாரங்களையும் ஊடகங்களில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

ஏப்.11- காலை 7 மணி முதல் வரும் 19-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. 4 தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்: 47% வாக்குகள் பதிவு - சத்யபிரதா சாகு
4 தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2. கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு: கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு
கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
3. வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை - சத்யபிரதா சாகு
வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை