மாநில செய்திகள்

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் கமல் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு + "||" + Karur: Velayuthunthalayam area On Kamal shoe attack in Furore

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் கமல் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் கமல் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் மீது நடந்த செருப்பு வீச்சால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
கரூர்,

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்  எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.


அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, இந்து தீவிரவாதம் குறித்து பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் இன்று மறுப்பு தெரிவித்தனர்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.  அதனால் தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும்.  இந்த மனுவை நாங்கள் விசாரணை மேற்கொள்ள இயலாது என நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும் நாளை சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கரூரில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் மீது நடந்த செருப்பு வீச்சு தாக்குதலால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சினேகன் மற்றும் தொண்டர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 42 பேர் போட்டி
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 42 பேர் போட்டியிடுகிறார்கள். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
2. பள்ளிபாளையம் மெக்கானிக், மனைவி- மகள்களுடன் தீக்குளிக்க முயற்சி - கந்துவட்டி கொடுமையால் விபரீதம்
கந்துவட்டி கொடுமையால் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனைவி-மகள்களுடன் பள்ளிபாளையம் மெக்கானிக் தீக்குளிக்க முயன்றார்.
3. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் மே மாத இறுதிக்குள் முடியும் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் தகவல்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்தார்.
4. கரூர் அருகே பரிதாபம்: தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பலி - டிரைவர் கைது
கரூர் அருகே தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
5. கரூர், நாமக்கல், சேலம் இடையே ரெயில் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி - 15 நாட்கள் பயணிகள் ரெயில் ரத்து
கரூர், நாமக்கல், சேலம் இடையே ரெயில் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி காரணமாக, 15 நாட்கள் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.