மாநில செய்திகள்

தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் + "||" + Kamal Haasan request for volunteers

தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர்,

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மீது நடந்த செருப்பு, முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தொண்டர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!” என்று தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3. களை இழந்த அ.தி.மு.க. 48-ம் ஆண்டு தொடக்க விழா ‘கொடி கூட கட்டவில்லையே’ என தொண்டர்கள் வேதனை
திருச்சியில் அ.தி.மு.க. 48-ம் ஆண்டு தொடக்க விழா களை இழந்த நிலையில் காணப்பட்டது. கொடி கூட கட்டவில்லையே என தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
4. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையின்றி மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது கலெக்டர் வேண்டுகோள்
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. தகுதி பெறாத, முறையாக பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்
தகுதி பெறாத, முறையாக பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.