உலக செய்திகள்

அமெரிக்காவில் திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும் + "||" + Learn English, pass civics exam for US visa: Donald Trump announces big increase in quota for skilled migrants

அமெரிக்காவில் திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும்

அமெரிக்காவில் திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும்
திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்

அமெரிக்காவிற்கான புதிய விசா கொள்கையை பரிந்துரை செய்துள்ளார் அதிபர் டிரம்ப். தற்போது கிரீன் கார்டு முறை நடைமுறையில் உள்ளது.

இதனை மாற்றும் விதமாக அமெரிக்காவை கட்டமைப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய விசா கொள்கையை அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ரோஸ்கார்டனில் பேசிய அவர், 

குடும்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கிரீன் கார்டுகளைக் குறைத்து, திறன், கல்வி, ஆங்கிலத்தை துல்லியமாக பேசுதல் போன்ற இதர தகுதிகளின் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிட்டு குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.இது எல்லைப் பாதுகாப்பையும் உள்நாட்டு வளர்ச்சியையும் மேம்படுத்தும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 திறன் அடிப்படையில் ஆற்றலுக்காக 12 சதவீதம் பேருக்கு தற்போது கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. புதிய பரிந்துரையின் படி திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57 சதவீதமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 10 பேர் காயம்
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயம் அடைந்தனர்.
2. இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது : அமெரிக்கா கருத்து
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையொட்டி இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
3. அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்: ஹூவாய் நிறுவனம்
அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு
அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.
5. அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி
அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.