தேசிய செய்திகள்

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, பிரமாண்ட பேரணியில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு + "||" + Congress General Secretary of UP (East) Priyanka Gandhi Vadra holds a ro adshow in Mizrapur

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, பிரமாண்ட பேரணியில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, பிரமாண்ட பேரணியில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், பிரியங்கா காந்திக்கு தொண்டர்கள் வழி நெடுகிலும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மிர்சாபூர்,

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். மக்களவையின் 7-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா வாக்கு சேகரித்தார்.

பிரமாண்ட பேரணியில், காங்கிரஸ் தொண்டர்கள் வழி நெடுகிலும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கு இரு கரம் கூப்பியவாறே பிரியங்கா காந்தி சென்றார்.