தேசிய செய்திகள்

கோட்சே குறித்த கருத்து 3 பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நோட்டீஸ் + "||" + Amit Shah ticks off 3 BJP leaders for Godse shocker, says not the party line

கோட்சே குறித்த கருத்து 3 பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நோட்டீஸ்

கோட்சே குறித்த கருத்து 3 பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நோட்டீஸ்
கோட்சே குறித்து ஆதரித்து கருத்து கூறிய் 3 தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் தான் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கமல் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.

இது குறித்து கேட்ட கேள்விக்கு போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் நாதுராம்கோட்சே தீவிரவாதி இல்லை என்றும் அவர் சிறந்த தேசபக்திமான் என்றும் கூறினார்.  இதற்கு பாரதீயஜனதா கண்டனம் தெரிவித்தது. இதனால் பிரச்சினை எழவே அவர் நேற்று மாலை பகிரங்க மன்னிப்பு கோரினார்.

காந்தியை கொன்ற கோட்சே தேச பக்தர் என்று பேசிய போபால் பாஜக வேட்பாளர் சாத்வி ப்ரக்யாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய சாத்வியை மன்னிக்க முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே கமல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்து கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி நலின் குமார் கட்டீல், கோட்சே ஒருவரைத்தான் கொலை செய்தார், மும்பை தீவிரவாதி கசாப் 72 பேரை கொன்றான். ராஜீவ காந்தி 17000 பேரை கொலை செய்தார். இதில் யார் மோசமானவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என மற்றொரு பிரச்சினையை  கிளப்பினார்.

இதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்குமார் ஹெக்டே, "70 ஆண்டுகள் கழித்து இன்றைய தலைமுறையினர் மாறுபட்ட சூழலை விவாதிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். கண்டிக்கப்பட்ட விஷயத்தை கேட்பதற்கான ஒரு நல்ல எதிர்காலம் பிறந்துள்ளது. இந்த விவாதத்தை பார்த்து இருந்தால் கோட்சே மகிழ்ச்சி அடைந்து இருப்பார்" என்றார்.

இதனிடையே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கோட்சேவை பாராட்டி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாஜவின் முக்கிய நிர்வாகிகள் பிரக்யா சிங், நலின் குமார், அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 3 பேரும் இது தொடர்பாக 10 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹேராம் முதல் கோட்சே வரை தொடர் சர்ச்சைகளில், கமல்ஹாசன்
நாதுராம் கோட்சே பற்றி கருத்து சொல்லி எதிர்ப்பிலும் பிரசாரத்தில் முட்டை, செருப்பு வீச்சுகளிலும் சிக்கி உள்ளார் கமல்ஹாசன்.
2. நான் பேசியது சரித்திர உண்மை; 2 நாட்களுக்கு பின் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேச்சு
யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றும் உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை என்றும் 2 நாட்களுக்கு பின் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசினார்.
3. கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்டு
சர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
4. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது: பிரதமர் மோடி
ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை‘பரிசு பெட்டியை கொடுத்துவிட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார்’ டி.டி.வி.தினகரன் மீது கமல்ஹாசன் தாக்கு
அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை. சின்ன பரிசு பெட்டியை கொடுத்து விட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார் என டி.டி.வி.தினகரனை கமல்ஹாசன் தாக்கி பேசினார்.