தேசிய செய்திகள்

மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் உணருகிறார்கள்- அமித்ஷா + "||" + Modi's regime Safe People feel - Amit Shah

மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் உணருகிறார்கள்- அமித்ஷா

மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் உணருகிறார்கள்- அமித்ஷா
மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் உணருகிறார்கள் என பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி

டெல்லியில் பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா , பிரதமர் மோடி கூட்டாக  பேட்டி அளித்தனர். அப்போது அமித்ஷா  கூறியதாவது:-

5 ஆண்டு பாஜக ஆட்சிக்கு இன்று கடைசி நாள், சிறப்பாக பணியாற்றினோம் என்ற மகிழ்ச்சி உள்ளது. சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தலில் பாஜகவிற்கு இதுதான் முக்கியமானது. நாங்கள் கடைசி நேரத்தில் வெற்றி பெற முடியாத 120 லோக்சபா தொகுதிகளை வென்றெடுப்பதே எங்கள் இலக்கு. நல்ல முடிவுகளை எடுப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்.

பாஜக கொண்டு வந்த திட்டங்கள், கொள்கைகள் சமுதாயத்தின் அனைத்து நிலையிலும் உள்ள மக்களுக்கு உதவியாக அமைந்துள்ளது. மீண்டும் மோடி அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு மோடி அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மீதான திட்டத்தை கருத்தில் கொண்டுள்ளோம்.

வீட்டு வசதி, மின்சாரம், சமையல் கேஸ் வசதி கடைக்கோடி மக்களுக்கு கிடைத்து உள்ளது.

மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் உணருகிறார்கள்.

மக்களவை தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாஜக பரப்புரை மேற்கொண்டது

133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது மோடி அரசு.

அரசை சுமூகமாக நடத்துவதில் நாங்கள் கவனமாக உள்ளோம் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
2. பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி
பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
3. ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
4. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
5. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...