தேசிய செய்திகள்

நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் - பிரதமர் மோடி உருக்கம் + "||" + The path we passed is not easy; Over 5 years I have crossed many obstacles- Prime Minister Narendra Modi

நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் - பிரதமர் மோடி உருக்கம்

நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் - பிரதமர் மோடி உருக்கம்
நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
புதுடெல்லி

டெல்லியில் பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா , பிரதமர் மோடி கூட்டாக  பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி   கூறியதாவது:-

தேர்தல் பரப்புரை முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது; நான் சற்று இளைப்பாறலாம். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம்.

தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.
 
கடந்த 2 தேர்தல்களில், ஐபிஎல் கூட நடத்தப்படவில்லை. அரசாங்கம் வலுவாக இருக்கும்போது, ஐபிஎல், ரம்ஜான், பள்ளி பரீட்சை மற்றும் மற்றவைகள்  அமைதியாக நடக்கும்.பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல தேர்தலும் திருவிழாவை போல நடக்கிறது -

நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன்.

மக்கள் ஏகோபித்த ஆதரவு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஐந்து வருடங்கள் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்; பாஜகவிற்கு இந்த வருட மக்களவைத் தேர்தலில் நாட்டை ஆள்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். அறுதி பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். 5 வருடம் ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி,  உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு தேவை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.
2. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் -பிரதமர் மோடி மரியாதை
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
3. தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
”தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
4. "கோ பேக் மோடி" டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள்
கோ பேக் மோடி டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
5. சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை: எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..!
இன்று மோடி - சீன அதிபர் சந்திப்பில் எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு உளளது.