தேசிய செய்திகள்

என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் - பிரதமர் மோடி + "||" + PM Narendra Modi confident of majority

என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் - பிரதமர் மோடி

என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் -  பிரதமர் மோடி
என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைந்தது.  கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தை மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  மீண்டும் மோடி அரசுதான் வரும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் காம்ருப் வரை ஒட்டுமொத்த நாடும் சொல்கிறது.

இந்த தேர்தலில், 300 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். என்னை மீண்டும் பிரதமர் ஆக்க முடிவு எடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 130 கோடி மக்களின் விருப்பத்தேர்வு, பா.ஜனதா கூட்டணிதான். இந்த ஞாயிற்றுக்கிழமை நீங்கள் ஓட்டுப்போட போகும்போது, புதிய சரித்திரம் எழுதப்போகிறீர்கள். 

கடந்த சில பத்தாண்டுகளுக்கு பிறகு, தொடர்ச்சியாக 2–வது தடவையாக பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். முந்தைய தேர்தல்களில் இருந்து இந்த தேர்தல் வேறுபட்டது. முன்பெல்லாம் இந்திய மக்கள் ஏதேனும் ஒரு கட்சிக்காக வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் நாட்டுக்காக ஓட்டளிக்கிறார்கள். புதிய இந்தியாவை உருவாக்க ஓட்டுபோடுகிறார்கள் எனக் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
2. பிரதமரின் பொதுக்கூட்டத்தில் நோட்டீஸ் வீசியவரால் பரபரப்பு
அரியானா சட்டசபை தேர்தலையொட்டி, தானேசர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
3. பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக மோடி திகழ்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
4. 700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை பிடித்த போலீசார்
700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
5. பிரதமர் மோடி உறவினரிடம் கொள்ளை; ஒருவர் கைது
பிரதமர் மோடியின் சகோதரி மகளிடம் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...