தேசிய செய்திகள்

பா.ஜனதா அரசு அமைவதை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி + "||" + Chandrababu Naidu tried to unite opposition leaders to prevent the BJP from forming the government

பா.ஜனதா அரசு அமைவதை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி

பா.ஜனதா அரசு அமைவதை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி
பா.ஜனதா அரசு அமைவதை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்க, சந்திரபாபு நாயுடு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
புதுடெல்லி,

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் பா.ஜனதா அரசு அமைவதை தடுக்க ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தீவிர முயற்சி எடுத்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ள அவர் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்தார்.


அவர் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கிறார். பின்னர் லக்னோ சென்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்திக்கிறார். சந்திரபாபு நாயுடு கூறும்போது, ‘‘அனைவரையும் வரவேற்கிறேன். தேர்தல் முடிவுக்கு பின்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மட்டுமல்ல, பா.ஜனதாவை எதிர்க்கும் அனைவரும் இணைந்து ஒரு மகா கூட்டணி அமைக்க வரும்படி அழைக்கிறேன்’’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில், பா.ஜனதா அரசு செயல்பட தொடங்கி ஒரு மாதம் ஆகிறது - மந்திரி சி.டி.ரவி பேட்டி
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு செயல்பட தொடங்கி ஒரு மாதம் ஆகிறது என்று மந்திரி சி.டி.ரவி கூறினார். கர்நாடக சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2. காஷ்மீரில் கவனம் செலுத்தி வரும் பா.ஜனதா அரசு பொருளாதார வீழ்ச்சியை பற்றி சிந்திக்கவில்லை எச்.வசந்தகுமார் அறிக்கை
காஷ்மீரில் கவனம் செலுத்தி வரும் பா.ஜனதா அரசு பொருளாதார வீழ்ச்சியை பற்றி சிந்திக்கவில்லை என எச்.வசந்தகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.