தேசிய செய்திகள்

மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்களின் ஓட்டு நோட்டாவுக்கே + "||" + Sex workers in West Bengal make themselves heard with NOTA

மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்களின் ஓட்டு நோட்டாவுக்கே

மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்களின் ஓட்டு நோட்டாவுக்கே
மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள், தங்களது ஓட்டு நோட்டாவுக்கே என தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள் இந்த தேர்தலில் நோட்டாவுக்கே ஓட்டு போடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதுபற்றி பாலியல் தொழிலாளியும், அவர்களின் உரிமைகளுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனத்தின் செயலாளருமான காஜல் போஸ் கூறியதாவது:-


மேற்குவங்காள மாநிலத்தில் போட்டியிடும் 466 வேட்பாளர்களையும் நாங்கள் சந்தித்து, பாலியல் தொழிலை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை உங்கள் தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் எந்த வேட்பாளரும் எங்கள் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கவில்லை. இதனால் இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலிலும் நோட்டாவுக்கு தான் நாங்கள் ஓட்டுபோட்டோம். இன்று நடைபெறும் இறுதிகட்ட தேர்தலிலும் நாங்கள் நோட்டாவுக்கு தான் ஓட்டு போடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முன்னிலையில் துர்கா பூஜை விழாவில் அவமானப்படுத்தப்பட்டதாக கவர்னர் குற்றச்சாட்டு
முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜை விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தான்கர் குற்றம் சாட்டியுள்ளார்.