தேர்தல் செய்திகள்

தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு + "||" + Voting for 4 assembly constituency ends in Tamil Nadu

தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெற்றது. ஏற்கனவே அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது.  

அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதால் அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. இடைத்தேர்தலுக்காக 4 தொகுதிகளிலும் 656 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது. 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மறுவாக்குப்பதிவும் இன்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

5 மணி நிலவரப்படி சூலூர் - 67.18%, அரவக்குறிச்சி - 79.49%, திருப்பரங்குன்றம் - 61.99%, ஒட்டப்பிடாரம் - 66.77% வாக்குகள் பதிவாகியிருந்தது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.