தேசிய செய்திகள்

கருத்துக்கணிப்பு தகவலால் பா.ஜனதாவினர் மகிழ்ச்சி, மே 23-க்கு காத்திருக்கும் காங்கிரஸ் + "||" + Raj Exit polls bring cheer to BJP, Cong waiting for May 23

கருத்துக்கணிப்பு தகவலால் பா.ஜனதாவினர் மகிழ்ச்சி, மே 23-க்கு காத்திருக்கும் காங்கிரஸ்

கருத்துக்கணிப்பு தகவலால் பா.ஜனதாவினர் மகிழ்ச்சி, மே 23-க்கு காத்திருக்கும் காங்கிரஸ்
கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தகவல்கள் நேற்று மாலை வெளியாகியது. பா.ஜனதா கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்த மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானிலும் பா.ஜனதாவின் கையே ஓங்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதே சமயம் கருத்துக்கணிப்பு தகவல்கள் பலமுறை பொய்யாகியுள்ளது, தேர்தல் முடிவு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறது.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் அங்கு ஆளும் காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புக்கள்  வெளியாகியுள்ளது. பா.ஜனதாவிற்கு 20 தொகுதிகள் வரையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதை  பிரதிபலிக்கிறது என பா.ஜனதா தொண்டர்கள் கூறிவருகிறார்கள்.

பா.ஜனதா தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள் என பா.ஜனதா தலைவர்கள் கூறிவருகிறார்கள். மறுபுறம் காங்கிரஸ் தொண்டர்கள், மாநிலத்தில் பா.ஜனதாவிற்கு ஆதரவான அலை எதுவும் தென்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கே மக்களுடைய ஆதரவு இருக்கும். 23-ம் தேதி முடிவு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் போலீசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் போலீசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2. அரியானா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுட்டுக்கொலை
அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள விகாஸ் சதுர்வேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வலியுறுத்தி ராகுல்காந்தி வீட்டு முன் இளைஞரணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வலியுறுத்தி ராகுல்காந்தி வீட்டு முன் இளைஞரணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
4. ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
வெவ்வேறு ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களி டம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
5. ராஜஸ்தான் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
ராஜஸ்தானில் லாரி கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.