தேசிய செய்திகள்

ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டம் + "||" + Exit Poll 2019 is gossip Opposition should stay strong Mamata Banerjee

ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டம்

ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டம்
ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜனதா கூட்டணி 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லும் என தெரிவித்துள்ளன.  உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று கூறியுள்ளன. அதே சமயத்தில், பா.ஜனதாவும் 30 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்திலும் பா.ஜனதா கால் பதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற பா.ஜனதா இம்முறை 10-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வீண் வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்; எதிர்க்கட்சிகள்  உறுதியாக இருக்க வேண்டும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலம் மத்தியில் ஆட்சியமைக்கும் கட்சியை தீர்மானம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணியை அமைத்தது. ஆனால் காங்கிரசை கழற்றிவிட்டது. மறுபுறம் காங்கிரஸ் பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கியது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்கு பிரியும் என்றே பார்க்கப்பட்டது. 

இப்போது தேர்தலுக்கு பின்னர் வெளியாகிய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவு தொகுதி கிடைக்குமா? என்ற கேள்வி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கூட்டணி சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து 78 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் பா.ஜனதா கூட்டணி 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையே நீண்ட நேரம் ஆலோசனை நடைபெற்றுள்ளது. என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை. 

இருவரையும் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  

இறுதி முடிவுகள் வெளியான பிறகுதான் மாயாவதி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வார். அதுவரை லக்னோவிலேயே அவர் தங்கி இருப்பார். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களையும் அவரவர் மாவட்டத்திலேயே தங்கி இருந்து ஓட்டு எண்ணிக்கையை கண்காணித்து வருமாறு கூறியுள்ளோம். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு லக்னோவுக்கு வருமாறு தெரிவித்துள்ளோம். உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணிக்கு 60 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, கருத்து கணிப்பு முடிவை நாங்கள் நம்பவில்லை என அக்கட்சி வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சகோதரர் ஆனந்த் குமாரின் ரூ. 400 கோடி மதிப்பிலான பிளாட்டை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
2. மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் - சமாஜ்வாடி
சமாஜ்வாடி கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்ற மாயாவதியின் அவசர முடிவு சமூக நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்தும் என சமாஜ்வாடி தெரிவித்துள்ளது.
3. ”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி: மாயாவதி விமர்சனம்
”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி என்று மாயாவதி விமர்சித்துள்ளார்.
4. பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் -மாயாவதி
பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி கூறியுள்ளார்.
5. இடைத்தேர்தலில் நாங்களும் தனியாக போட்டியிடுவோம் - அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வந்தால் நாங்களும் தனித்தே போட்டியிடுவோம் என அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.