தேசிய செய்திகள்

தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனு தள்ளுபடி + "||" + SC dismisses PIL seeking 100 % matching of VVPAT slips with EVMs during vote counting on May 23

தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனு தள்ளுபடி

தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனு தள்ளுபடி
தேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,

வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும், 100 சதவீதம் இந்த நடமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொதுநல மனுவாக தாக்கல் செய்தது. 

இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்ற வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்து, அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது எனகூறி மனுவை  விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனு மீதான விசாரணையின் போது, இதுபோன்ற பொதுநல மனுக்கள், பெரும் தொல்லை எனக்கூறிய நீதிபதிகள் தேசம் அதன் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அனுமதிப்போம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக, 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 21 எதிர்க்கட்சிகள்  மனு தாக்கல் செய்து இருந்தன.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச்சாவடிகளில்  ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை, கடந்த மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.