தேசிய செய்திகள்

மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு -கருத்து கணிப்பில் தகவல் + "||" + CSDS-Lokniti pre-poll survey: the PM candidate effect

மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு -கருத்து கணிப்பில் தகவல்

மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு -கருத்து கணிப்பில் தகவல்
44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற வி‌ஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்று கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.

தி ஹிண்டு- சிஎஸ்டிஎஸ்- லோக் நிதி- நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 24 சதவிகித மக்களின்  ஆதரவு கிடைத்துள்ளது. 

அதில், மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பா.ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு மிக, மிக சாதகமாக இருந்தன என்று தெரிய வந்துள்ளது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக, பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகையில் 44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், படித்தவர்கள். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தனிப்பட்ட முறையில் மோடிக்கு இருக்கும் இந்த செல்வாக்குதான் பா.ஜனதா கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க வழி வகுத்துள்ளது.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இத்தகைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை 24 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. பா.ஜனதா தொண்டர்களில் 80 சதவீதம் பேர் 2014-ல் மோடியை ஆதரித்து இருந்தனர். தற்போது அது 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரசை சேர்ந்தவர்களில் 7 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களில் 11 சதவீதம் பேரும் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.

மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து இருக்க மாட்டேன் என்று 32 சதவீதம் பா.ஜனதா தொண்டர்கள் தெரிவித்தனர். மற்ற கட்சிகளில் இருக்கும் மோடி மீதான அனுதாபிகளும் இதே கருத்தை வெளியிட்டனர். இதன் மூலம் மோடிக்கு பா.ஜனதாவையும் தாண்டி மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

கட்சிக்காக வாக்களித்ததாக அனைத்து மாநிலங்களிலும் கணிசமானவர்கள் கூறியுள்ளனர். அது போல வேட்பாளரை பார்த்து வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமர் யார் என்பதை பொருத்து வாக்களித்து இருப்பதாக கணிசமானவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்காக பா.ஜனதா கட்சிக்கு அதிக அளவு வாக்குகள் விழுந்தது தெரிய வந்துள்ளது. பட்டதாரிகளிடமும் தற்போதைய பிரதமருக்கே  அதிக ஆதரவு உள்ளது. இந்தி அதிகம் பேசும் மாநிலங்களில்,  உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே மோடி பிரதமர் வேட்பாளர் என்கிற தாக்கம் இல்லை. இங்கே, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் முகத்தை வைத்து வாக்குகள் விழுந்துள்ளன.

ஒட்டுமொத்தத்தில் 46 சதவீதம் பேர் கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பார்த்து  வாக்களித்துள்ளனர். 17 சதவீதம் பேர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்.

இதற்கிடையே, அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிபெறுவது  கடினம்தான் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊடகங்கள் உங்களுக்கு வலை விரிக்கும் என பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறினார்- அபிஜித் பானர்ஜி
ஊடகங்கள் உங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாக மோடி நகைச்சுவையாக என்னிடம் கூறினார் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி கூறினார்.
2. தமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்; பிரதமர் மோடி பெருமிதம்
தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
3. பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி
பணியில் உயிரிழந்த காவல் துறை அதிகாரிகளின் தைரியத்தினை பிரதமர் மோடி தேசிய காவலர் தினத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
4. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.
5. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் -பிரதமர் மோடி மரியாதை
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.