தேசிய செய்திகள்

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் + "||" + Pakistan boat with 200 kg of heroin seized off Gujarat

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு எல்லை வழியாக போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதை கட்டுப்படுத்த எல்லைப் பாதுகாப்பு படை தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதனால் கோடிக்கணக்கான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்படும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதேபோன்று கடல் வழியாகவும் இந்தியாவிற்கு போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் கடத்தப்படுகிறது. இப்போது இந்திய கடலோர காவல்படையின் ரோந்து பணியின்போது 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் குஜராத்திற்கு வருகிறது என எல்லைப் பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவலை உளவுத்துறை கொடுத்துள்ளது. பாகிஸ்தான் படகிலிருந்து இந்திய படகிற்கு மாற்றி கடத்தலை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடல்பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்ட கடலோரப் காவல்படை இன்று அதிகாலையில் பாகிஸ்தான் படகு ஒன்றை வழிமறித்தது.

அரபிக் கடலில் ஜாகுவ் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய  அதிகாரிகள் சோதனை செய்தபோது அதிலிருந்து சுமார் 200 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போதைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதிலிருந்தவர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.  பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ. 600 கோடியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: இந்தியாவின் கூற்றை நிராகரித்தது பாகிஸ்தான் ராணுவம்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததாக கூறிய இந்தியாவின் தகவலை பாகிஸ்தான் இராணுவம் மறுத்து உள்ளது.
2. பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் - பிரதமர் மோடி உறுதி
பாகிஸ்தானுக்குள் ஓடும் நதியில் இந்திய பங்கின் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
3. நாட்டை விமர்சிக்கும் நபர்களை ரெய்டுகளால், பயங்கரவாத குற்றச்சாட்டுகளால் அமைதிப்படுத்தும் பாகிஸ்தான்
நாட்டை விமர்சிக்கும் நபர்களை ரெய்டுகளால், பயங்கரவாத குற்றச்சாட்டுகளால் பாகிஸ்தான் அமைதிப்படுத்தி வருகிறது.
4. பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு: அமெரிக்கா கவலை
பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
5. "உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர், ஐ.நா. விவகாரங்களுக்கான கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து உண்மைகளை மறைந்து சேற்றை வாரி இறைப்பதாக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.