தேசிய செய்திகள்

காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு: அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு + "||" + Defamation case against Congress: Anil Ambani decided to withdraw

காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு: அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு

காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு: அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு
காங்கிரஸ் மீதான அவதூறு வழக்கினை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.
ஆமதாபாத்,

ரபேல் ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என காங்கிரஸ் சார்பு நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து காங்கிரஸ் மீதும், நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை மீதும் அனில் அம்பானி சார்பில் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இது குறித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலையொட்டி அரசியல் காரணங்களுக்காக தான் இது போன்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே எங்கள் தரப்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது. எனினும் அறிக்கை யார் பெயரில் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.