தேர்தல் செய்திகள்

முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை கண்காணிக்கும் வேட்பாளர்...! + "||" + Why SP-BSP men are now chowkidars

முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை கண்காணிக்கும் வேட்பாளர்...!

முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை கண்காணிக்கும் வேட்பாளர்...!
உ.பி.யில் முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து வாக்கு இயந்திரங்களை வேட்பாளர் ஒருவர் கண்காணித்து வருகிறார்.
இந்திய நாடாளுமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடைசிக்கட்ட தேர்தல் மே 19-ம் தேதி முடிந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சந்தேகத்துக்குரிய வகையில் வாகனங்களில் இடமாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன என்று  இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தேர்தல் கமி‌ஷன் பதில் அளித்தது. 

இருப்பினும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை  பாதுகாப்பு படையினரை விடவும் அதிமுக்கியத்துவமாக வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வேட்பாளர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையருகே முகாம் அமைத்து ஏப்ரல் 11-ம் தேதியிலிருந்து கண்காணிப்பை மேற்கொள்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மீரட்டில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் யாகூப் குரேஷி  'பைனாகுலர்’ மூலம்  சோதனை செய்தார். மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள், தொண்டர்கள் இரவு பகலாக உஷார் நிலையில் கண்காணிப்பை மேற்கொள்கிறார்கள்.

மீரட்டில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே இரு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஷிப்ட் முறையில் வேட்பாளர்கள், தொண்டர்கள் கண்காணிப்பை மேற்கொள்கிறார்கள். சிசிடிவி காட்சிகளையும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் சுபாஷ் பிரதான் பேசுகையில், நாங்கள் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் முடிந்ததுமே இங்கு முகாம் அமைத்து விட்டோம். அப்போதிலிருந்தே நாங்கள் கண்காணிப்பை தொடர்கிறோம் என்று கூறியுள்ளார். 

பைனாகுலர் மூலமாக பார்ப்பதால் ஒவ்வொரு நகர்வையும் எங்களால் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசினார் மோடி
குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.
2. மோடி தொகுதி பள்ளிக்கூடத்திற்கு மின் கட்டணம் ரூ.618.5 கோடி அதிர்ச்சியில் நிர்வாகம்
உத்தரபிரதேச பள்ளிக்கு இரண்டு மாத மின் கட்டணமாக 618.5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
3. மாயாவதி மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்துவிடுவர் உபி மந்திரி சர்ச்சை பேச்சு
மாயாவதி ஒரு மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்து விடுவார்கள் என உத்தரபிரதேச மந்திரி ஒருவர் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
4. சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம்
சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம் வெளியானது சர்ச்சையாகியுள்ளது.
5. உன்னோவ் பலாத்காரம் மற்றும் விபத்து வழக்கு, பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
உன்னோவ் பாலியல் பலாத்காரம் மற்றும் விபத்து வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனையை மேற்கொண்டுள்ளது.