தேசிய செய்திகள்

பிரதமருக்கு எதிராக அவதூறு: ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு + "||" + Defamation against Prime Minister: Judge suspended in case of Rahul Gandhi - Delhi court order

பிரதமருக்கு எதிராக அவதூறு: ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு

பிரதமருக்கு எதிராக அவதூறு: ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் ரத்தத்தின் பின்னால் ஒளிந்துகொள்வதாகவும், அவர்களது தியாகத்தை காசாக்குவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2016-ம் ஆண்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடுமாறு டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜோகிந்தர் துலி என்ற வக்கீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 15-ந் தேதி போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமர் விஷால் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி வரை இந்த வழக்கில் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்து நேற்று உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. 49-வது பிறந்த நாள்: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து
49-வது பிறந்த நாளை கொண்டாடிய ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
2. டெல்லியில் ராகுல் காந்தியுடன் தேவேகவுடா சந்திப்பு: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார்
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த தேவேகவுடா, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் தெரிவித்தார்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
4. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மக்களிடம் குறை கேட்டார் - இன்று டெல்லி புறப்படுகிறார்
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மக்களிடம் குறைகளை கேட்டார். இன்று அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
5. ராஜினாமா முடிவில் ராகுல் உறுதி; காங்கிரஸ் கட்சிக்கு இருதலைவர்கள் நியமனம்?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால் காங்கிரசுக்கு இருதலைவர்களை நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.