மாநில செய்திகள்

ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம் : நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + We will come to power in a democratic manner: MK Stalin's speech

ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம் : நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம் : நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் கொல்லைப்புறமாக அல்லாமல் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வருவோம் என்று நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை, 

தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் தலைமையில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஹாரூன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமதுஅலி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நோன்பு திறப்பு நிகழ்ச்சி வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு இப்போது நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஒரு எதிர்பார்ப்பு நிறைந்ததாக இருக்கிறது. காரணம் நாட்டை ஆள்வது யார்? என்பதை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை நாளை(இன்று) நடைபெறுகிறது. அதனை எதிர்நோக்கி நாம் மட்டும் அல்ல, இந்த நாடே எதிர்பார்க்கிறது. ஆனால், முடிவுகள் நாம் என்ன எண்ணினோமோ அப்படித்தான் அமையப்போகிறது.

நான் உட்கார்ந்து இருக்கும் போது உங்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. காரணம் ஊடகத்துறையினர் மறைத்துக்கொண்டார்கள். எப்போதும் மறைக்கக்கூடிய நிலையில் தான் ஊடகத்துறையினர் இருக்கிறார்கள். அதை எல்லாம் சந்தித்து தான் இன்று நாம் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த ½ மணி நேரத்தில் ஊடகத்துறையினர் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டார்கள். கருத்துக்கணிப்பில் வெளியான செய்திகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். தி.மு.க. எப்போதும் கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்வது கிடையாது.

நாம் செய்ய வேண்டிய பணியை செய்து இருக்கிறோம். மக்கள் ஆற்ற வேண்டிய பணியை ஆற்றி இருக்கிறார்கள். இன்றைய நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பது நிச்சயமாக வரக்கூடிய காலத்தில் வரலாற்றில் இடம்பெறும் வகையில் அமையும். மத்தியில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி தான் அமையும். உறுதியாக ராகுல்காந்தி தான் நாட்டின் பிரதமர் ஆவார். இதைத்தான் நான் அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்வேன்.

அதேபோன்று தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆட்சியை கவிழ்க்கவில்லை என்று கேட்கிறார்கள். நாளை(இன்று) நிச்சயமாக அதற்கான விடை கிடைக்கப்போகிறது. தலைவர் கருணாநிதி கொல்லைப்புறம் வழியாக எந்த இடத்துக்கும் வரக்கூடாது என்ற வகையில் தான் எங்களை வளர்த்து இருக்கிறார். அதன்படி, நாளை(இன்று) நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மூலம் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் இந்த நோன்பு நிகழ்ச்சியை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

1. “மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது” நாங்குநேரி பிரசாரத்தில் சரத்குமார் கடும் தாக்கு
“பழிவாங்கும் உணர்வுடன் இருக்கும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது“ என்று நாங்குநேரி தொகுதி பிரசாரத்தில் சரத்குமார் கடுமையாக தாக்கி பேசினார்.
2. “மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது” நாங்குநேரி பிரசாரத்தில் சரத்குமார் கடும் தாக்கு
“மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது“ என்று நாங்குநேரி தொகுதி பிரசாரத்தில் சரத்குமார் கடுமையாக தாக்கி பேசினார்.
3. தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - மு.க.ஸ்டாலின்
தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது - நாராயணசாமி நம்பிக்கை
மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
5. தி.மு.க. பற்றி அபாண்டமாக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி: உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. தான் திட்டமிட்டு நடத்தவில்லை - விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தி.மு.க. பற்றி எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக பேசுகிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்று விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பேசினார்.