தேசிய செய்திகள்

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர் பின்னடைவு + "||" + Smriti Irani leads against Rahul Gandhi

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர் பின்னடைவு

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர் பின்னடைவு
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது  சொந்தத் தொகுதியான அமேதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மாநிலத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சியை அந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. எனினும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. 

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ஸ்மிருதி இரானி அமேதியை குறிவைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அங்கு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என பார்க்கப்பட்டது. அதுபோன்றே இருக்கிறது. காங்கிரசின் பாரம்பரியமான தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியைவிட 14,500 வாக்குகள் பின் தங்கியுள்ளார். ஸ்மிருதி இரானி 1,38,160 வாக்குகளையும், ராகுல் காந்தி  1,23,602 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவுகிறது - பிரதமர் மோடி பேச்சு
கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள், பாகிஸ்தானுக்கு உதவுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
2. மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது - நாராயணசாமி நம்பிக்கை
மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. “பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்” பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
4. ஜேப்படி திருடன்போல ஏழை மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்; மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
ஜேப்படி திருடன்போல பிரதமர் மோடி ஏழை மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
5. காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை
கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறி உள்ளார்.