தேர்தல் செய்திகள்

பா.ஜனதா வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர் பின்னடைவு + "||" + BJP Congress Lock Horns in Kanyakumari

பா.ஜனதா வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர் பின்னடைவு

பா.ஜனதா வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர் பின்னடைவு
கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பா.ஜனதா சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிராக  காங்கிரஸ் தரப்பில் வேட்பாளராக வசந்தகுமார் இறக்கப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கையில்  பா.ஜனதா வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். 

கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் 3,47,792 வாக்குகளைப் பெற்றுள்ளார். பொன். ராதாகிருஷ்ணன் 1,90,747 வாக்குகளைப் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு
மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.
2. 2022 உ.பி. தேர்தலுக்காக அடிமட்ட அளவில் பணியாற்ற பிரியங்கா காந்தி திட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பிரியங்கா காந்தி புதிய திட்டத்தை தீட்டியுள்ளார்.
3. பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது
பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்க உள்ளது.
4. ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்
ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதானசவுதாவை முற்றுகையிட சென்ற ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு : காங்கிரஸ் வலியுறுத்தல்
முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.