தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’ + "||" + AP Election Results Trends Andhra Pradesh Chooses Jagan Reddy

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு ‘பூஜ்ஜியம்’
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் படுதோல்வியை நோக்கி செல்கிறார்.
மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலும் நடந்தது. இரு தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளியிலும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 16 இடங்களில் வென்ற தெலுங்குதேசம் ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை.

மாநிலத்திலும் ஆட்சியை இழக்கிறது. மொத்தம் உள்ள தொகுதிகள் 175 ஆகும். இதில் ஆட்சியமைக்க பெரும்பான்மை 88 தொகுதிகளின் வெற்றியாகும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியே 144 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு கட்சி 30 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதாக நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு எம்.பி.யாவது கிடைக்குமா? என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

விரைவில் சந்திரபாபு நாயுடு ராஜினாமாவை ஆளுநரிடம் வழங்க உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது: பா.ஜனதாவுடன் விரிசல் இல்லை - நிதிஷ் குமார் சொல்கிறார்
கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது என்றும், பா.ஜனதாவுடன் விரிசல் இல்லை என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
2. மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
3. வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா சந்திப்பு
வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களை அமித்ஷா சந்திக்க உள்ளார்.
4. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் எழுச்சிக்கு மம்தாவே காரணம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் எழுச்சிக்கு மம்தாவே காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
5. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாதுகாப்பை டெல்லி போலீஸ் அதிகரித்துள்ளது.