தேசிய செய்திகள்

மகா கூட்டணி ஆதரவிலும் பா.ஜனதாவிற்கு எதிராக ராகுலுக்கு தோல்வி முகம்...! + "||" + Rahul Gandhi Trailing From Amethi

மகா கூட்டணி ஆதரவிலும் பா.ஜனதாவிற்கு எதிராக ராகுலுக்கு தோல்வி முகம்...!

மகா கூட்டணி ஆதரவிலும் பா.ஜனதாவிற்கு எதிராக ராகுலுக்கு தோல்வி முகம்...!
அமேதி தொகுதியில் மகா கூட்டணியின் ஆதரவிலும் பா.ஜனதாவிற்கு எதிராக ராகுல் காந்தி தோல்வி முகம் காணப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் இறக்கப்பட்டார். ஸ்மிருதி இரானி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அமேதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இப்போது தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாகவே உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்து வருகிறார். 

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோன்றே இருக்கிறது. காங்கிரசின் பாரம்பரியமான தொகுதியில் ராகுல் காந்தி பின்னடவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியைவிட 25000 வாக்குகள் பின் தங்கியுள்ளார். ஸ்மிருதி இரானி 265792 வாக்குகளையும், ராகுல் காந்தி  237749 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

மாநிலத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சியை அந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. எனினும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ராகுல் காந்தி தொகுதியில் மகா கூட்டணி ஆதரவு தெரிவித்தும் ராகுல் காந்திக்கு தோல்வி முகம் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவுகிறது - பிரதமர் மோடி பேச்சு
கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள், பாகிஸ்தானுக்கு உதவுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
2. மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது - நாராயணசாமி நம்பிக்கை
மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. மூழ்கும் நிலையில் காங்கிரஸ் என்ற கப்பலை விட்டுவிட்டு ஓடிய கேப்டன் ராகுல்காந்தி -ஓவைசி விமர்சனம்
மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் என்ற கப்பலை விட்டுவிட்டு ஓடிய கேப்டன்தான் ராகுல் காந்தி என்று ஓவைசி விமர்சித்துள்ளார்.
4. ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது: யோகி ஆதித்யநாத் கிண்டல்
ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் மராட்டியத்தில் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
5. அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆமதாபாத் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்
ஆமதாபாத் கோர்ட்டுகளில் நடைபெற்றுவரும் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேற்று ஆஜரானார். இதில் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.