தேசிய செய்திகள்

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி; பா.ஜனதாவும் ஆதிக்கம் + "||" + BJP gets a solid foothold in Odisha but Naveen Patnaik retains state

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி; பா.ஜனதாவும் ஆதிக்கம்

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி; பா.ஜனதாவும் ஆதிக்கம்
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி சட்டசபைத் தேர்தலில் வெற்றியை தனதாக்கியது. தேர்தலில் பா.ஜனதாவும் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஒடிசா மாநிலத்தில் 21 நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுடன், 146 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. சட்டசபையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை தொகுதிகளின் எண்ணிக்கை 76. இந்த எண்ணிக்கையை தாண்டி ஆளும் பிஜு ஜனதா தளம் 108 தொகுதிகளை தனதாக்குகிறது. பா.ஜனதா 22 தொகுதிகளில் முன்னிலைப் பெறுகிறது. காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. மாநிலத்தில் இதுவரையில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை பா.ஜனதா பின்னுக்கு தள்ளியது.

21 நாடாளுமன்றத் தொகுதியில் பிஜு ஜனதா தளம் 13 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 8 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் இரு கட்சிகளும் முன்னும், பின்னுமாக வந்து கொண்டு இருக்கிறது. மாநிலத்தில் மக்கள் சட்டசபைக்கு ஒருவிதமாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒருவிதமாகவே வாக்கினைப் பதிவு செய்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. மாநிலத்தில் பா.ஜனதாவின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பா.ஜனதா-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கட்சி நிர்வாகிகள் நியமனங்களில் முக்கியத்துவம் குறைப்பு; முதல்-மந்திரி எடியூரப்பாவை ஓரங்கட்டும் பா.ஜனதா
முதல்-மந்திரி எடியூரப்பாவை பா.ஜனதா ஓரங்கட்டி வருகிறது. குறிப்பாக கட்சி நிர்வாகிகள் நியமனங்களில் அவருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது.
3. அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் - பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி
அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் கூறினார்.
4. ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு 4 யானைகள் சாவு
ஒடிசா மிருகக்காட்சி சாலையில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 4 யானைகள் உயிரிழந்தது.
5. ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை: 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது
ஒடிசாவில் வெளிநாட்டுக்காரர் மகன்களுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 வருடங்களுக்கு பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.