தேசிய செய்திகள்

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி தோல்வி : பா.ஜனதாவுக்கு மீண்டும் கைகொடுத்தது உத்தரபிரதேசம் + "||" + Bahujan Samaj, Samajwadi coalition fails: UPA has again helped BJP

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி தோல்வி : பா.ஜனதாவுக்கு மீண்டும் கைகொடுத்தது உத்தரபிரதேசம்

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி தோல்வி : பா.ஜனதாவுக்கு மீண்டும் கைகொடுத்தது உத்தரபிரதேசம்
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், பாரதீய ஜனதா கட்சிக்கு மீண்டும் கைகொடுத்தது. பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி தோல்வியை தழுவியது.

லக்னோ, 

2014 நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிட்டன.

அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி 71 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான அப்னாதளம் 2 இடங்களிலும் அமோக வெற்றி பெற்றன.

இது பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து போட்டியிட்டது.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி, பாரதீய ஜனதா கட்சிக்கு கடும் சவாலாக அமைந்தது. இந்த 3 கட்சி கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இந்த முறையும் உத்தரபிரதேச மாநிலம் பாரதீய ஜனதா கட்சிக்கு கைகொடுக்கும் என கூறின. அது அப்படியே பலித்தும் உள்ளது.

இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி பலத்த அடி வாங்கி உள்ளது. அந்தக் கூட்டணியை மக்கள் ஏற்று அங்கீகரிக்கவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

இங்கு பாரதீய ஜனதா கட்சி 61 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான அப்னாதளம் 2 இடங்களிலும் அமோக வெற்றி பெற்றன.

பகுஜன்சமாஜ் கட்சி 11 இடங்களில் வென்றது. சமாஜ்வாடி கட்சி 5 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ராஷ்டிரிய லோக்தளம் 1 இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றிருப்பதை அந்தக் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டாடினர்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியம்: பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு
பா.ஜனதா, சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பாக நள்ளிரவில் தலைவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
2. தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரிய சக்தியாக உருவாகும் திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரிய சக்தியாக உருவாகும் என்று தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் கூறினார்.
3. பதவி விலகாவிட்டால் கர்நாடக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு
பதவி விலகாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கர்நாடக பாஜக முடிவு எடுத்துள்ளது.
4. காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
5. கட்சியை விட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள்; எடியூரப்பா பேட்டி
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று எடியூரப்பா கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...