தேசிய செய்திகள்

நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள் : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை + "||" + Congratulations to the people who gave the verdict of a constant government: Vice President Venkaiah Naidu

நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள் : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை

நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள் : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை
நிலையான அரசு அமைவதற்காக தெளிவான தீர்ப்பை வழங்கிய மக்களை வாழ்த்துவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

நிலையான அரசு அமைவதற்கு தெளிவான, திட்டவட்டமான தீர்ப்பை தேர்தலில் வழங்கிய இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல, இந்த தேர்தலை திறம்படவும், சுமுகமாகவும் நடத்தியமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையை பெற்று இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்த கட்சியை சார்ந்திருந்தாலும் செழுமைமிக்க ஜனநாயக பாரம்பரியத்தின் அடிப்படையை மேலும் ஆழமாக்கி வளர்ச்சி, சீர்திருத்தம் மக்களின் வாழ்வில் மேம்பாடு ஆகிய லட்சியங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மிருதங்கம் கலாசாரத்தின் ஒரு அங்கம்; நூல் வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
‘மிருதங்கம், கலாசாரத்தின் ஒரு அங்கம்’ என்று நூல் வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
2. மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும்; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை பெற மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
3. அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை - வெங்கையா நாயுடு
அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
4. காஷ்மீரில் இனி தீவிரவாதம் ஒழியும் என நம்புகிறேன்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
காஷ்மீர் மசோதாவை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
5. அரசியல் சட்ட நகலை கிழிக்க முயன்ற 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றம் - வெங்கையா நாயுடு உத்தரவு
அரசியல்சட்ட நகலை கிழிக்க முயன்ற மக்கள் ஜனநாயக கட்சியின் 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.