தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து + "||" + Rahul Gandhi congratulates Prime Minister Narendra Modi

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த வெற்றிக்காக அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

ஜனநாயகத்தில் மக்கள்தான் உயர்ந்தவர்கள், அவர்கள்தான் ஆட்சியை முடிவு செய்வார்கள் என நான் பிரசாரத்தின் போதே குறிப்பிட்டேன். அந்த வகையில் நாட்டின் பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை நான் முற்றிலும் மதிக்கிறேன்.

இந்த வெற்றிக்காக பிரதமர் மற்றும் பா.ஜனதாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் நலன்களை அவர் பாதுகாப்பார் என நம்புகிறேன்.

இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அமைந்தது. அந்த வகையில் காங்கிரசின் சித்தாந்தங்களுக்காக தொடர்ந்து நாங்கள் போராடுவோம். காங்கிரஸ் தொண்டர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், ‘பயப்பட தேவையில்லை, நமது சித்தாந்தங்களுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம், அதில் வெற்றியும் பெறுவோம்’ என்பதாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். இந்த தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். வெளிப்படையாக கூறவேண்டுமென்றால், இந்த தோல்விக்கான காரணம் குறித்து விவாதிப்பதற்கான நாள் இதுவல்ல. நரேந்திர மோடிதான் பிரதமர் என மக்கள் தெளிவாக முடிவு செய்துள்ளனர். அதை நான் மதிக்கிறேன்.

அமேதியில் எனது தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன். அங்கு வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானியை வாழ்த்துகிறேன். அமேதி தொகுதியை அன்புடனும், மதிப்புடனும் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அமேதி மக்களின் முடிவை நான் மதிக்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்காவும் பங்கேற்றார். அவரும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையே தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் தவறானவை என காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த தகவல்களில் உண்மை இல்லை எனவும், அது குறும்புத்தனமானது எனவும் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊடகங்கள் உங்களுக்கு வலை விரிக்கும் என பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறினார்- அபிஜித் பானர்ஜி
ஊடகங்கள் உங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாக மோடி நகைச்சுவையாக என்னிடம் கூறினார் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி கூறினார்.
2. பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக மோடி திகழ்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
3. நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை
நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்
கர்தார்பூர் வழித்தடத்தை வரும் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய மந்திரி ஹர்சிம்ராத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
5. பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு
பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று தசரா விழாவில் பிரதமர் மோடி பேசினார்.