தேசிய செய்திகள்

சூரத் அருகே பயிற்சி மைய கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு பிரதமர் மோடி இரங்கல் + "||" + Massive fire in Surat building, 15 dead

சூரத் அருகே பயிற்சி மைய கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு பிரதமர் மோடி இரங்கல்

சூரத் அருகே பயிற்சி மைய கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு பிரதமர் மோடி இரங்கல்
குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
சூரத்,

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் பிரபல பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

தீ விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என சூரத் காவல் ஆணையர் சதீஷ்குமார் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். 

சூரத் நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.