தேசிய செய்திகள்

காஷ்மீரின் சில பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிப்பு + "||" + Musa killing: Curfew continues in parts of Kashmir for second day

காஷ்மீரின் சில பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

காஷ்மீரின் சில பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
காஷ்மீரின் சில பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட இயக்கமான அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற  பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான ஜகிர் முசா என்பவனை பாதுகாப்பு படையினர் நேற்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். மூசா கொல்லப்பட்டதையடுத்து, நேற்று காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பலர் தானாக முன்வந்து கடைகளை அடைத்தனர். சில இடங்களில் போராட்டமும் நீடித்தது. 

இதனால், அசம்பாவித சம்பங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், குல்காம், புல்வாமா ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு -5 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த வெடிகுண்டு தயாரித்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய சதிகாரன், துப்பாக்கி சண்டையில் பலியானான்.
5. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - ராணுவ அதிகாரி வீர மரணம்
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்.