உலக செய்திகள்

”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் + "||" + 'Very smart' Kim knows N Korea must give up nukes: Trump

”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
டோக்கியோ,

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பிறகு அந்நாட்டுடன் மோதல் போக்கை வடகொரியா  அதிபர் கிம் ஜாங் அன் கைவிட்டார். அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளையும் கைவிட்ட கிம் ஜாங் அன், மென்மையான போக்கை கடைபிடித்தது உலக நாடுகள் மத்தியில் வடகொரியா மீதான பார்வையை மாற்றத் தொடங்கியது. 

இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ந் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதரப்பு உறவில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும், ஏவுகணை சோதனையை வடகொரியா துவங்கியிருக்கிறது. 

இந்த நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் சாதுர்யமானவர் என்றும் தனது நாட்டை மேம்படுத்த, அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பதை அவர் அறிந்து இருப்பார்" என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால் ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் வாபஸ் - டிரம்ப் தடாலடி
அமெரிக்க உளவு விமானத்தை வீழ்த்தியதால், ஈரானை தாக்க உத்தரவிட்டு கடைசி நிமிடத்தில் டிரம்ப் அதனை வாபஸ் பெற்றார்.
2. வடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
2 நாட்கள் பயணமாக வடகொரியா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங், கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுகிறார்.
3. டிரம்ப் இங்கிலாந்து பயணம்: அரசி எலிசபெத்துடன் சந்திப்பு
இங்கிலாந்து பயணத்தின் போது, டிரம்புக்கு எதிராக ராட்சத பலூன் பறக்கவிட்டு போராட்டம் நடத்த சிலர் திட்டமிட்டடுள்ளனர்.
4. ஜூன் மாதத்தில் புதினையும் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன்: டொனால்டு டிரம்ப்
ஜூன் மாதத்தில் ரஷ்ய தலைவர் புதினையும் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
5. உலகைச் சுற்றி...
வடகொரியாவில் நேற்று முன்தினம் ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தென்கொரியா அறிவித்தது.