தேசிய செய்திகள்

ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு + "||" + Robert Vadra summoned by ED in connection with London properties

ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு

ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு
சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில், விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி, 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, வெளிநாட்டில் சொத்து வாங்கியதில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் 12 தடவை விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி முன்னிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து உள்பட 3 நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரி டெல்லி தனிக்கோர்ட்டில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வெளிநாடு செல்ல வதேராவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வக்கீல் வாதிட்டார். இதுகுறித்து 3-ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23-ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
2. ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
3. முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு: ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் விடுத்துள்ளது.
4. இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது! சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்!
இந்திய கொடிக்கு பதில் வேறு நாட்டு கொடியை ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்!
5. பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய 7 பேரின் சொத்துகள் அமலாக்கத்துறை கையகப்படுத்தியது
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி சையது சலாவுதீன் தலைமையிலான ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி உதவி செய்த 7 பேரின் 13 சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது. அதன் மதிப்பு ரூ.1.22 கோடி.