மாநில செய்திகள்

மந்திரி சபையில் தமிழகம் புறக்கணிப்பு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்கே.எஸ்.அழகிரி அறிக்கை + "||" + DMK Congress alliance MPs Aware of the need to act KS Azhagiri report

மந்திரி சபையில் தமிழகம் புறக்கணிப்பு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்கே.எஸ்.அழகிரி அறிக்கை

மந்திரி சபையில் தமிழகம் புறக்கணிப்பு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்கே.எஸ்.அழகிரி அறிக்கை
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியோடு 57 மந்திரிகளும் பதவியேற்று உள்ளனர். பா.ஜனதாவோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அ.தி.மு.க. சார்பாக எவரும் மந்திரிசபையில் சேர்க்கப்படவில்லை.


மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும், அ.தி.மு.க.விலிருந்து எவரையும் மத்திய மந்திரிசபையில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பதன் மூலம் அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே கருத வேண்டியதாக இருக்கிறது.

நரேந்திர மோடிக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசிய காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடைபெற்று இருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி தான்.

இத்தகைய சூழலில் காவிரி நீர், மேகதாது அணை, பாலாறு, ‘நீட்’ தேர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை மறுக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.கள் 37 பேரும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைப்பு
பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
2. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் சஞ்சய் தத் நம்பிக்கை
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
3. தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல ‘இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்’ - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
4. தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடமாக உள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
5. அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா- மு.க.ஸ்டாலின்
வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.