உலக செய்திகள்

ஜப்பானில் தானியங்கி ரெயில் தவறான பாதையில் சென்று விபத்து, 14 பேர் காயம் + "||" + Fourteen Injured After Japan Driverless Train Goes Wrong Way

ஜப்பானில் தானியங்கி ரெயில் தவறான பாதையில் சென்று விபத்து, 14 பேர் காயம்

ஜப்பானில் தானியங்கி ரெயில் தவறான பாதையில் சென்று விபத்து, 14 பேர் காயம்
ஜப்பானில் தானியங்கி ரெயில் தவறான பாதையில் சென்று விபத்து நேரிட்டதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

டோக்கியோவின் புறநகர் பகுதியில் டிரைவர் இல்லாத தானியங்கி ரெயில்கள் இயக்கப்படுகிறது. நேற்றிரவு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரெயில் ஒன்று தவறான பாதையில் சென்றுள்ளது. தண்டவாளம் முடியும் பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்து நேரிட்டது. இதில் ரெயிலில் இருந்த 14 பேர் காயம் அடைந்தனர். ஆபத்தான அளவிற்கு விபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

30 ஆண்டுகளாக சேவையில் இருக்கும் ரெயில் முதல் முறையாக இதுபோன்ற விபத்தை எதிர்க்கொண்டுள்ளது என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தை அடுத்து அங்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டு சோதனை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் ரூ.33 லட்சத்துக்கு ஏலம் போன நண்டு
ஜப்பானில் ரூ.33 லட்சத்துக்கு நண்டு ஒன்று ஏலம் போனது.
2. ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஷூரி அரண்மனையில் தீ விபத்து
ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையானதும் உலக பாரம்பரியத்தைக் கொண்டதும் அந்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டு வந்ததுமான ஷூரி அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
3. ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்
ஜப்பானை நோக்கி மேலும் இரண்டு புயல்கள் நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல் : பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு
ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலால் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
5. ஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ்’ புயல்: 2 ஆயிரம் விமானங்கள் ரத்து, 42 லட்சம் பேர் வெளியேற்றம்
ஜப்பானில் நேற்று ‘ஹகிபிஸ்‘ புயல் தாக்கியது. இதன் காரணமாக 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 42 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.