தேசிய செய்திகள்

பா.ஜனதா கூட்டணியில் சேருமாறுஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகளுக்கு பரிந்துரைமத்திய மந்திரி அழைப்பு விடுத்தார் + "||" + Join the BJP coalition Andhra and Telangana recommend the Chief ministers

பா.ஜனதா கூட்டணியில் சேருமாறுஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகளுக்கு பரிந்துரைமத்திய மந்திரி அழைப்பு விடுத்தார்

பா.ஜனதா கூட்டணியில் சேருமாறுஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகளுக்கு பரிந்துரைமத்திய மந்திரி அழைப்பு விடுத்தார்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஐதராபாத், 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு போதுமான பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து உள்ளது. தங்கள் மாநில வளர்ச்சிக்காக தெலுங்கானா, ஆந்திரா முதல்-மந்திரிகள் முறையே சந்திரசேகர் ராவ், ஜெகன்மோகன் ரெட்டி இருவரும் இந்த கூட்டணியில் இணைய வேண்டும் என தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதால், சந்திரபாபு நாயுடு அரசை மக்கள் வெளியேற்றி இருப்பதாக கூறிய அத்வாலே, வேறு பல மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோருவதால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது மிகவும் கடினம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்
ஆந்திராவில் மணல் பற்றாக்குறைக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
2. வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம்
வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு செய்து உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம் எழுந்து உள்ளது.
3. ஆந்திராவில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் குழந்தை பலி
ஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலியானது.
4. ஆந்திராவில் மணல் சுரங்கங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் அறிமுகம்
ஆந்திராவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருவதையடுத்து மணல் சுரங்கங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
5. ஆந்திர பிரதேச அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம்
ஆந்திர பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.