தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு + "||" + Mamata behaving like anti national trying to scuttle growth Bengal BJP

மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
ஜூன் 15-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என பிரதமர் மோடிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். மாநில திட்டங்களுக்கு உதவி செய்யும் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த பயனும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

மம்தா பானர்ஜியின் இந்த முடிவை விமர்சனம் செய்துள்ள மாநில பா.ஜனதா தலைவர் ஜெய் பிரகாஷ், மோடியின் தலைமையில் ஒட்டுமொத்த தேசமே முன்நோக்கி செல்லும் நிலையில், மம்தா மட்டும் எதிர்க்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் கூட நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் மம்தா மட்டும் எதிராக உள்ளார். மம்தாவின் முடிவு தேசத்தின் நலனுக்கு எதிரானது. அவர் இந்தியாவிற்கு எதிரானவர் போன்று செயல்படுகிறார். வங்காளத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலும் உள்ளது எனக் கூறியுள்ளார். 

இதற்கிடையே பா.ஜனதாவிற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாதம் அல்லது வளர்ச்சி தொடர்பாக மதவாத கட்சியான பா.ஜனதாவிடம் இருந்து எங்களுக்கு எந்தஒரு பாடமும் தேவையில்லை எனக் கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா?
மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார்.
2. எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய 6 கட்டளைகள்
திரிணாமுல்காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி 6 கட்டளைகளை வழங்கி உள்ளார்.
3. ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் பா.ஜனதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் பா.ஜனதா அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி
கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது என மோடி அரசை மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
5. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு
ஒரே தேசம்-ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவது இல்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.