தேசிய செய்திகள்

ராஜினாமா முடிவில் ராகுல் உறுதி; காங்கிரஸ் கட்சிக்கு இருதலைவர்கள் நியமனம்? + "||" + Congress mulls proposal for two working presidents

ராஜினாமா முடிவில் ராகுல் உறுதி; காங்கிரஸ் கட்சிக்கு இருதலைவர்கள் நியமனம்?

ராஜினாமா முடிவில் ராகுல் உறுதி; காங்கிரஸ் கட்சிக்கு இருதலைவர்கள் நியமனம்?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால் காங்கிரசுக்கு இருதலைவர்களை நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


2019 தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டும் வென்றது. இம்முறையும் அக்கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாது. கட்சியும் கோரப்போவது கிடையாது எனக் கூறிவிட்டது. தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி செயற்குழுக் கூட்டத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கட்சியின் தலைவர்கள் ஏற்கவில்லை. இப்போது ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வரும் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு இரு செயல் தலைவர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இவ்விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் பணியில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு செயல் தலைவர்களில் ஒருவர் தென் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு செயல்தலைவர்கள் நியமிக்கப்படும் விவகாரத்தில் சுஷில்குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே இருவருக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது என காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகிறது. 

இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக இருக்கும் எனத் தெரிகிறது. முதலில் 3, 4 செயல் தலைவர்களை நியமனம் செய்வது என திட்டமிடப்பட்டதாவும், பின்னர் இளம் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருவதை குறைக்க 2 செயல்தலைவர்கள் முறை கொண்டுவரப்படுகிறது  என கூறப்படுகிறது. மேலும் தேர்தலில் தீவிரமாக செயல்படாத மாநிலத் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு
கர்நாடக விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.
2. கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோஷம்
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி கோ‌ஷம் எழுப்பினார்.
3. காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவரே வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது
ராகுல் காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது.
4. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.
5. மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மிலிந்த் தியோரா விலகல்
மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.