தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + BJP using Union Home Ministry for political conspiracy WB Minister Partha Chatterjee

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 18  இடங்களை கைப்பற்றி வலுவான அடித்தளத்தை அமைத்து உள்ளது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடுமையான மோதல்போக்கு சம்பவங்களும், உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு வருகிறது.
  
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குவங்க அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாநிலத்தில் எந்தஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை, நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என மேற்கு வங்க அரசு பதில் கொடுத்தது. மத்திய அரசின் செயலை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்குவங்க அமைச்சருமான பர்த்தா சட்டர்ஜி பேசுகையில், மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் நடக்கிறது. அரசியல் ரீதியாக திட்டமிட்டு இது  செயல்படுகிறது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முறைகேடாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பான முறையில் பா.ஜனதாவை எதிர்ப்பவர்களை நசுக்க மத்திய அரசு முயலுகிறது. ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிகிறது - சட்டசபை தேர்தல் தேதி வெளியாகிறது
கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஆனந்த சதுர்த்திக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2. கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை - மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி
கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை என்று திருப்பூரில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
3. கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக நளின்குமார் கட்டீல் பதவி ஏற்பு ‘கட்சியை பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன்’ என பேச்சு
கர்நாடக மாநில பா.ஜனதா புதிய தலைவராக பதவி ஏற்ற நளின்குமார் கட்டீல், கட்சியை பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன் என்று கூறினார்.
4. இந்து கடவுள் கிருஷ்ணா போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் - அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ.
இந்து கடவுள் கிருஷ்ணா போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் என அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
5. திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயண விளம்பரங்கள் : பா.ஜனதா விமர்சனம்
திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயணங்களுக்கான விளம்பரங்கள் இடம் பெற்ற விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அரசை பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.