தேசிய செய்திகள்

மும்பையில் கனமழை; சென்னை வரும் விமானங்கள் காலதாமதம் + "||" + Heavy rain in Mumbai; The arrival of Chennai flights will be delayed

மும்பையில் கனமழை; சென்னை வரும் விமானங்கள் காலதாமதம்

மும்பையில் கனமழை; சென்னை வரும் விமானங்கள் காலதாமதம்
மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு விமானங்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபி கடலில் வாயு புயல் உருவாகியுள்ளது.  வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் ஆனது 24 மணிநேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும்.  இந்த புயல் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில் ஜூன் 13ந்தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

புயலால் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் மும்பையில் இருந்து சென்னை வரும் 2 விமானங்கள் 2 மணிநேரம் காலதாமதமுடன் வந்து சேருகின்றன.  இதனால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.  அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் உறவினர்களும் நீண்டநேரம் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விடிய,விடிய கொட்டித்தீர்த்த கனமழை: மஞ்சூர் பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன
மஞ்சூர் பகுதிகளில் விடிய,விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்தன.
2. இன்றும், நாளையும் மஞ்சள் ‘அலர்ட்’ ; கர்நாடக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை
கர்நாடக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மஞ்சள் ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
3. கோத்தகிரியில் கனமழை: 35 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின
கோத்தகிரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் 35 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
4. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
5. தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.